Sunday, March 18, 2012

FLASH NEWS

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம் கடந்த பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாபரமசிவம், பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு பதவியை இழந்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமை அதற்கு மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

Tuesday, December 13, 2011

ஸ்ரீ கதிராளம்மன் கோவில் திருவிழா


                      தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மாளியக்காடு ஊராட்சி அக்கரைவயல் ஸ்ரீ கதிராளம்மன் கோவில் திருவிழா ஆனி மாதம் நடைபெறும். அவற்றில் முக்கியமானது தூக்கு தேர் திருவிழா. இத்திருவிழாவில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து தரிசனம் செய்வார்கள்.








Monday, December 12, 2011

முத்தரையர்களும் நாயக்கர்களும்



முத்தரையர் , நாயக்கர் , கம்பளத்தார் என்று சொல்லும் இவினதினர் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாரை கொண்ட ஒரே ஜாதி , அம்பலகாரர் , பாளையக்காரர் , ராயர் என்று பல பெயர்கள் இவர்களுக்கு , தமிழகத்தில் பெருன்பான்மை ஜாதி இவர்களே , அனால் இவர்கள் சேர்ந்தால் தமிழகம் தாங்காது என்று எண்ணி எதேதோ பொய் வரலாறுகளை சொல்லி இவர்களை பிரித்தே வெய்துள்ளனர் படுபாவிகள் , பெரும்பிடுகு , இளங்கோ , கட்டபொம்மன் போன்ற பல் வேறு அரசர்களை கொண்ட பெரிய இனம் , தெலுங்கு , தமிழ் இவர்கள் மொழி ..
சுமார் 1000 வருடம் முன்பு நாயகர்களின் ஆட்சி ஆந்திர , தமிழ்நாடு போன்ற திராவிட நாட்டில் நடை பெற்றது , அப்போது பாண்டியர்களுக்கும் முத்தரையர் கும் போர் வரும் போது படை பலத்துக்காக ஆந்திராவில் கம்பள நாட்டில் ஆண்டு வந்த ராயர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ஆகையால் ஆட்களை அனுப்ப சொல்லி முத்தரைய மன்னர் , கம்பள ராஜாவிடம் கூறுகிறார் , அதை ஏற்று அனுப்பிய வீரர்களே ஆதி கம்பளத்தார் இனம் , முத்தரையர்கள் தஞ்சை , புதுகோட்டை, திருச்சி போன்ற பகுதியுலும் , கம்பளத்தார் மதுரைக்கு தெற்கிலும் ஆட்சி செய்து வந்தனர் , 1300 கு பிறகு கம்பளத்தார் நாயக்கர்களாக மாறினார் , ஆக விஜயநகர , நாயக்கர் ஆட்சி , அதற்கு முந்தய திராவிட முத்தரையர் ஆட்சி என ஆண்டா பெரிய ஜாதி நம் ஜாதி , நமக்குள் பல பிரிவு இருந்தாலும் நாயக்கர் என்று சேர்ந்து நம் மக்களுகாக நாம் இருக்கனும் , வரலாறே இல்லாத ஜாதி எல்லாம் அநியாயம் பண்றான் , நம்ம ஜாதி மூடிட்டு இருக்கோம் , வீர ஜாதின்னு காட்டுவோம் , பெரும்பிடுகு , வீரபாண்டிய கட்டபொம்மன் வழி வந்த ஜாதி நு அறியாமையில் இருக்குற நம் சொந்தங்களுக்கு சொலுவோம் , நம் இனத்தவர்கள் ஒற்றுமையா இருப்போம் ///
முத்தரையர் தமிழ் குடியினர் , தெலுங்கு நாட்டையும் ஆண்டதால் அவர்களுள் தெலுங்கு பேச கூடியவர்கள் உள்ளனர் , நாயக்கர் இனம் இவ்வாறு பல பிரிவுகள் உள்ளது , அனால் ஒரு சில மடயனுங்க பழக்க வழக்கம் எல்லாம் வேறுன்னு வாதம் பனுவான் .. அவனுக்கு சொல்றது , எங்க கம்பளத்தார் இனமே கொங்கு நாட்டுல நாங்க பண்றா மாத்ரி திருமணம் முதலிய சடங்கு நடக்காது , அவர்கள் தென்னை , அரிசி போன்ற வற்றை அதிகம் உபயோக படுத்துவாங்க , எங்களுக்கு அது பழக்கம் இல்ல ஏன் என்றால் இங்க அரிசி எல்லாம் விளையாது , அதனால பழக்க வழக்கம் என்பது நிலம் சார்ந்த ஒன்றே தவிர , ஜாதிய அடையாளம் இல்லை , ஆகவே பெருசுங்க சொல்றா மாத்ரி பிரிஞ்சே இருந்தா நாளைக்கு நாட்டுல நாயக்கனே இருக்க மாட்டான் .. புரிஞ்சி செயல் படனும் இனிமேல் , நமலுக்கு மேல ஒரு ஜாதியே கிடையாது , எதுனா ஜாதி இருக்கா ? சொல்லுங்க .. இவளவு பெரிய ஜாதியுல பொறந்து மடத்தனமா இருக்கலாமா ? சொல்லுங்க ?


Thanks to naickernaidu.blogspot.com

கொங்கு வேட்டுவக்கவுண்டர்

கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு



கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமதுமுதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான்,வேட்டுவ தியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.

ஆதாரங்கள்

 
கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர், திருச்செங்கோடு, ஈரோடு,ஏழூர், மூக்குத்திபாளையம், பருத்திபள்ளி, வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள  கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும்  வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.

பூர்வீகம்

 
இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார்.புராணங்களும்,பழங்கதைகளும் இவர்களைகுருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள்(ஆதிகுடிகள்) என்பதுறுதி.வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும், வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக
வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.

இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள், வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில்காணப்படும் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுகற்களும், பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலைமேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.

Thanks to  Konguvettuvagounder.blogspot.com



Sunday, December 11, 2011

கரிகால சோழ சூரிய முத்தரையர்


கரிகால சோழ சூரிய முத்தரையர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயா சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து திருமலைநம்பி என்பவர் எழுதிய கடிதத்தில்தான் அவ்வருமையான செய்தி இருந்தது. அவர் தாம் கண்ட ஒரு செப்பேடடில் "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற வாசகம் உள்ளது என்றும், அச்செப்பேடு திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டியில் உள்ள பிச்சன் என்பவரிடம் என்றும் உள்ளது என்றும் எழுதியிருந்தார். "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற செய்தி தமிழ் வரலற்றுக்கு அருமையான செய்தி. முத்தரையர்கள் கரிகாலனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதும், சூரியகுலத் தொடர்பு கொண்டவர் என்பதும் தெளிவாகிறது அல்லவா? சோழர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
கரிகாலன் மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோமல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும், கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முத்தரையர் கரிகால சோழ குலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால், எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும், பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10ஆவது நூற்றாண்டு முதல் 14-15ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத்தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
வாசகர் கருத்துக்கள்
முத்தரையர்
முத்தரையர் பற்றிய இரா.நாகசாமி அவர்களின் கட்டுரை முத்தரையர் ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
முத்தரையர் என்ற சொல் தொடர் இரண்டு சொற்களால் ஆனது. திருமய்யம் கல்வெட்டு முத்தரையத் தலைவன் ஒருவனை "அரைசன்" என்று குறிக்கிறது. குன்னாண்டார் கோயில் கல்வெட்டில் பல்லவ நந்திவர்மன் காலத்தில் முத்தரையரின் பணியாளன் ஒருவன் "அரையர்கள் அடியான் வாலிவடுகன் ஆன கலிமூர்க்க இளவரையன்" என அழைக்கப்படுகின்றான். திருநெய்த்தானக் கல்வெட்டிலும் இவன் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளான்.
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்

என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம். எனவே முத்தரையர் என்பதிலும் ஈற்றில் உள்ள சொல் அரையர் என்பதில் ஐயமில்லை.
சிலர் முதற் சொல்லை மூன்று என்று கொள்கின்றனர். தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = முவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். முத்து + அரையர் எனவும் வருவதற்கு இல்லை. இவர்கட்கும் முத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆகவே முதற்சொல்லை முது அல்லது மூத்த என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியாமலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுக்கள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்.
முத்தரையர் கர்நாடகத் தொடர்புடையவர்களே, பகாப்பிடுகு முத்தரையன், பெரும்பிடுகு முத்தரையன் என்று முத்தரையர் பெயர்களில் காணப்படும். பிடுகு என்ற சொல் இடி என்னும் பொருளுடைய கன்னடச் சொல்லே.
பிற்காலத்தில் முத்தரையர் என்பது அரசர் அளிக்கும் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. முத்தரையர் அல்லாதவர்களும் அரசன் அளித்த சிறப்புப் பெயராகப் பூண்டனர். கல்வெட்டுக்கள் இதனை மிகத் தெளிவாகக் குறிக்கின்றன.
புலவர். செ. இராசு
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
நான் 18 பட்டயங்களின் நகல்கள் எடுத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட எல்லாப் பட்டயமும் கானாடு-கோனாடு சண்டையில் இறந்துபட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. பலபிழைகள் உள்ளன. தமிழ் எண் எழுத்தாகவும், சமஸ்கிருதம் கலந்தும் உள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ஆலயங்களின் பெயர்கள், வளநாடுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை போன்ற பல பட்டயங்கள் இதுவரை முத்தரைய நாட்டு அம்பலகாரர்களிடம் உள்ளன. ஆலயங்களில் கல்வெட்டாகவும் உள்ளன என்பதைப் பட்டயங்கள் நன்குபுலப்படுகின்றன.
இரா. திருமலைநம்பி திருமலைராய சமுத்திரம் கைக்குறிச்சி 622 303 புதுக்கோட்டை மாவட்டம்
28-10-88 தினமணி தொல்லியல் பகுதி முத்தரையர் கட்டுரையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. "விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுவதால் கங்க அரசர்களே முத்தரசர் என்ற முடிவு கூறப்படுகிறது. தெலுங்குச் சோழர்களின் மிகப்பழைய 6ம் நூற்றாண்டுத் தெலுங்குக் கல்வெட்டுகளில் முதுராஜூ என்ற பெயர்களோடு துகராஜூ, யுவராஜூ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இதனால் முத்தரசு முதுராஜூ என்ற இரு சொற்களின் வழக்கு இச் சொல்லாக்கத்தின் விளக்கத்தில் ஒருபடியாகுமே அன்றி தமிழ்நாட்டு முத்தரையரின் தோற்றத்திற்கு உரிய முடிவாகாது. கங்கரெல்லாம் முத்தரையர் அல்லர். முத்தரையர் என்ற குடிப்பெயர் உடையார் ஒருவரேனும் தன்னைக் கங்கர் என்று கூறிக் கொள்ளவில்லை. மூத்த குடியினர் என்ற பொருள் கங்கர்க்கும், தெலுங்குச் சோழர்க்கும் பொருந்தும். எனினும் தமிழ்நாட்டு முத்தரையர்க்கு எவ்வாறு பொருந்தும் அவர்கள் எந்த முது குடியினர்? தமிழ்நாட்டு முத்தரையர் எவ்வாறு களவரகளவர என்ற பட்டப்பெயர் கொண்டனர்? அவர்களுக்கும் களப்பிரர்க்கும் உள்ள தொடர்பு மற்ற இருவர்க்கும் உண்டா இதுமேலும் ஆய்வுக்குரியது.
கே.ஜி. கிஷ்ணன், மைசூர்
முத்தரையரைப் பற்றிய ஆராய்ச்சி தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை நாகசாமி அவர்கள் வெளிக்கொணர்ந்து வரலாற்றிற்கு ஒரு புதிய ஒளியினை ஏற்படுத்தியுள்ளார். அதற்காகத் தினமணிக்கும், கட்டுரை ஆசிரியருக்கும் முத்தரை சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வி. சந்திரசேகரன், சென்னை-17
கட்டுரை முத்தரையரைப் பற்றி சில தெளிவான விளக்கங்கள் தருகின்றது. கன்னடம், மலையாள மொழி இரண்டிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளதை நன்கு விளக்குகின்றது. களப்பிரர்களாகிய முத்தரையர்கள் தமிழர்கள்தாம் என்றும் இவர்கள் கர்நாடகத்தில் தங்கியதால் தமிழும், கன்னடமும் கலந்தன என்று கட்டுரை விளக்குகிறது. இதே போல் தமிழ்ச் சேரர்கள் மலையாளத்தை ஆண்டதனால் மலையாளத்திலும் தமிழ்ச் சொற்கள் வருவதின் காரணமும் நமக்குத் தெரிகின்றது. இக் கட்டுரையினால் முத்தரசர்கள் பல்வேறு இடங்களில் களப்பிரர், கங்கர், விருத்தராஜன், முத்துரசரு என்ற பெயர்களுடன் அழைக்கப்பட்டனர் என்ற கருத்தைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் திரு. நாகசாமி தெளிவாகக் கூறியுள்ளார்.
மு. திருப்பதி, ஆத்திகுளம்.
தினமணி 28-10-88 இதழில் இரா. நாகசாமி அவர்களின் முத்தராயர் கட்டுரை படித்து இன்புற்றேன். முது + அரையர் = முத்தரையர் என்ற விளக்கம் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி (செங்கல் நடுகற்கள் தொடர் எண் 1971/62 தொல் பொருள் ஆய்வுத்துறை வெளியீடு ஆண்டு 1972). மேலும் கடப்பை மாவட்டம் திருப்பலூரைச் சேர்ந்த 7ஆம் நூற்றாண்டைய கல்வெட்டு ஒன்றில் எரிகல் முதிராஜூ புண்யகுமாரன் என்ற ரேணாடுச் சோழ அரசன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். (Annual Report of Epigraphy 283/193738, Archaeological Survey of India). மேலும் அளப்பரிய ஆதிராஜர் என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதும் இத்தகைய முதுகுடி அரசர்களையே என்பது தெளிவு. இத்துடன் ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்கு தீர்க்கும் மூப்பன், மூப்பாடி போன்ற தலைவர்களின் பெயர்களும் எகிப்திய, துருக்கிய கிராம நிர்வாகியின் பெயராகக் குறிப்பிடப்படும் மூதோர் என்ற சொல்லும் ஆராயத்தக்கவை. அரசு என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கு முற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களாக இவற்றைக் கருதலாம்.
எஸ். இராமச்சந்திரன்
தொல்பொருள் ஆய்வுத்துறை, தஞ்சாவூர்.
Thanks  to  tamilartsacademy

HomeTop

முத்தரையர்


முத்தரையர்

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.
HomeTop

Friday, December 9, 2011

உறவுகளே


வணக்கம் ,  
தங்கள் பகுதியில் முத்தரையர் இனத்தை சேர்ந்த 
ஒன்றிய பெருந்தலைவர், 
நகராட்சி தலைவர், 
பேரூராட்சி தலைவர்,
மாநகராட்சி கவுன்சிலர்,
ஊராட்சி மன்ற தலைவர்,
மாவட்ட கவுன்சிலர் 
போன்ற பொறுப்புகள் வகிப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை 
mutharayarnews@yahoo.com
என்ற mail id க்கு அனுப்பவும்.
Thank u